பயங்கரவாத ஊக்குவிப்பு பட்டியலில் மீண்டும் கியூபா
13 Jan,2021
:பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் பட்டியலில் மீண்டும் கியூபாவை அமெரிக்கா சேர்த்துள்ளது.வடக்கு கரீபியன் கடலில் அமைந்துள்ள தீவு நாடு கியூபா. அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வந்தது.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா கியூபா உடன் நல்லுறவை ஏற்படுத்தினார். இரு நாடுகளிலும் பரஸ்பர துாதரகங்கள் திறக்கப்பட்டன. இதையடுத்து கியூபாவை பயங்கரவாத ஊக்குவிப்பு நாடுகள் பட்டியலில் இருந்து அமெரிக்கா நீக்கியது.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறியதாவது: அமெரிக்காவுக்கு உறுதி அளித்தபடி பயங்கரவாத ஊக்குவிப்பு நடவடிக்கைகளை கியூபா நிறுத்திக் கொள்ளவில்லை. பயங்கரவாத அமைப்புகள் செயல்பட கியூபா அரசு அனுமதித்து உள்ளது.அமெரிக்காவால் தேடப்பட்டு வரும் பல குற்றவாளிகளுக்கு கியூபா அடைக்கலம் கொடுத்துள்ளது. இது போன்ற காரணங்களால் பயங்கரவாத ஊக்குவிப்பு நாடுகள் பட்டியலில் மீண்டும் கியூபா சேர்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.