வேல்ஸில் அனைத்து பாடசாலைகளும் கல்லூரிகளும் தொலைதூரக் கற்றலுக்கு மாறுகின்றன!
05 Jan,2021
வேல்ஸில் அனைத்து பாடசாலைகளும் கல்லூரிகளும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை, தொலைதூரக் கற்றலுக்கு மாறுகின்றன.
சில பாடசாலைகள் புதன்கிழமை திறக்கப்பட இருந்தன. மற்றவை ஜனவரி 11ஆம் திகதிக்குள் உள்ளூர் அதிகாரிகளின் முடிவுகளுடன் திறக்கப்பட இருந்தன.
வேல்ஷ் உள்ளூராட்சி சபை மற்றும் கோல்காவ் சிம்ருவுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கிர்ஸ்டி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘ஒரு அரசாங்கமாக அடுத்த இரண்டு வாரங்கள் உள்ளூர் அதிகாரிகள், பாடகள் மற்றும் கல்லூரிகளுடன் தொடர்ந்து பணியாற்றுவோம்’ என கூறினார்.
கொரோனா வைரஸ் மாறுபாடு குறித்த கவலைகளுக்கு மத்தியில் தாமதமாக தொடங்கப்பட வேண்டும் என தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன.