பெலராஸில் கொவிட்-19 தொற்றினால் இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு
05 Jan,2021
!
பெலராஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால் மொத்தமாக இரண்டு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொரோனா வைரஸ் தொற்றினால் இரண்டு இலட்சத்து ஆயிரத்து 831பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 49ஆவது நாடாக விளங்கும் பெலராஸில் இதுவரை மொத்தமாக ஆயிரத்து 461பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஆயிரத்து 869பேர் பாதிக்கப்பட்டதோடு 10பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 16ஆயிரத்து 745பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 83ஆயிரத்து 625பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.