செக் குடியரசில் கொவிட்-19 தொற்றினால் ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
31 Dec,2020
செக் குடியரசில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, செக் குடியரசில் ஏழு இலட்சத்து ஆயிரத்து 622பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 21ஆவது நாடாக விளங்கும் செக் குடியரசில் இதுவரை மொத்தமாக 11ஆயிரத்து 429பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 16ஆயிரத்து 329பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 59பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து ஐந்தாயிரத்து 710பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 826பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
இதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஐந்து இலட்சத்து 84ஆயிரத்து 483பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.