அமெரிக்காவில் போயிங்-737 விமானங்களின் சேவை ஆரம்பமாகிறது
26 Dec,2020
அமெரிக்காவில் கடந்த 21 மாதங்களுக்குப் பின்னர், அடுத்த வாரம் முதல் போயிங்-737 மக்ஸ் ரக விமானங்கள் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளன.
2018, 2019ஆம் ஆண்டுகளில் இட்மபெற்ற பெரும் விபத்துகளைத் தொடர்ந்து, போயிங் மக்ஸ் ரக விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டு அவற்றின் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
வர்த்தக ரீதியில் போயிங் 737 மக்ஸ் ரக விமானங்களை இயக்குவதற்கு கடந்த நவம்பரில் அனுமதி வழங்கப்பட்டது.
இதையடுத்து, விமானத்தின் முதல் பயணம், கடந்த ஒன்பதாம் திகதி பிரேசிலில் தொடங்கிய நிலையில்,அடுத்த வாரத்தில் இருந்து அமெரிக்கன் எயார்லைன்ஸ் நிறுவனமும் போயிங்-737 மக்ஸ் ரக விமானங்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளது.
போயிங்-737 மக்ஸ் விமானங்கள் குறித்த வாடிக்கையாளர்களின் அச்சம் தொடந்தாலும், எரிபொருள் சேமிப்பில் முன்னிலையில் உள்ளதால், அவற்றைப் பயன்படுத்துவதில் விமான நிறுவனங்கள் ஆர்வம் செலுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.