தாய்லாந்தில் இறால் விற்ற மூதாட்டியால் 689 பேருக்கு கொரோனா
23 Dec,2020
தாய்லாந்தில் இறால் விற்ற 67 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்தில் இறால் விற்ற மூதாட்டியால் 689 பேருக்கு கொரோனா
கொரோனா வைரஸ்
தாய்லாந்து நாட்டில் தற்போது மீண்டும் கொரோனா பரவி வருகிறது. இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தலைநகர் பாங்காக்குக்கு அருகே உள்ள சமுத்சகோன் மாகாணத்தில் மிகப்பெரிய கடற்சார் உணவுப்பொருள் சந்தையான மாகாசாய் சந்தை உள்ளது. இந்தசந்தையில் இருந்து கொரோனா வைரஸ் கணிசமாக அதிகரித்ததால் அந்த மாகாணத்தை மூட அரசு உத்தரவிட்டுள்ளது.
இங்கு அதிகளவில் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை பார்ப்பதால் அவர்களை வெளியே வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மாகாசாய் சந்தையில் இறால் விற்ற 67 வயது மூதாட்டி ஒருவருக்கு கொரானா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அவரிடம் இருந்து 4 நாட்களில் 689 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மிகவும் வேகமாக பரவி உள்ள தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் மியான்மர் நாட்டை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள். கொரோனா பாதிப்புக்குள்ளான அந்த மூதாட்டி வெளிநாடு செல்லவில்லை. பின்னர் எப்படி அவருக்கு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த சமுத்சகோன் மாகாணத்தில் வருகிற 3-ந் தேதி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.