சீன நிறுவனங்கள் உரிமத்தை தடைசெய்த அமெரிக்கா; கொதிக்கும் சீன வர்த்தகத்துறை
20 Dec,2020
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல்போக்கு அதிகரித்த வண்ணம் உள்ளது. 50 சீன நிறுவனங்களின் உரிமத்தை அமெரிக்கா முன்னதாக ரத்து செய்தது/ இதற்கு தற்போது சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சீன கம்யூனிச அரசின் வர்த்தகத் துறை கடந்த சனியன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. சீன சிப் தயாரிப்பு நிறுவனமான எஸ்எம்ஐசி சீன நிறுவனங்களின் உரிமையைப் பாதுகாக்க முயற்சி மேற்கொள்வதாக உறுதியளித்தது.
சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, சீன ராணுவத்துடன் தொடர்பில் இருப்பதாக அமெரிக்கா முன்னதாக குற்றம்சாட்டியது. அமெரிக்க அரசின் முக்கிய தகவல்களை சீனா தனது தொழில்நுட்ப நிறுவனங்கள் மூலமாக திருடுவதாக கூறப்பட்டதை சீன அரசு மறுத்துள்ளது.
பதவியைவிட்டு வெளியேறவிருக்கும் டிரம்ப், இறுதிவரை சீன அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். அடுத்து அமைய விருக்கும் ஜோ பைடன் ஆட்சியில் அமெரிக்க-சீன உறவு எவ்வாறு இருக்கும் என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.அனாவசிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா தவிர்க்க வேண்டும் என்று சீனா கூறி உள்ளது.