ஈரான் பூமிக்கு அடியில் அணு உலையை அமைப்பதாக தகவல்!
19 Dec,2020
ஈரான் பூமிக்கு அடியில் மேலும் ஒரு அணு உலையை அமைப்பதாக செயற்கை கோள் படங்கள் காட்டியுள்ளன.
குவாம் மாகாணத்தின் போர்டோ நகரில் அணு உலைக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுவதை காட்டும் செயற்கைகோள் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
எனினும் போர்டோ நகரில் அணு உலை கட்டப்படுவதை ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளவில்லை.
அதேபோல் ஈரானின் அணு திட்டங்களை கண்காணித்து வரும் ஐ.நா. கண்காணிப்பாளர்களும் இதுகுறித்து உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
முன்னதாக இஸ்பகான் மாகாணத்திலுள்ள நாதன்ஸ் நகரில் பூமிக்கு அடியில் புதிய அணு உலை அமைக்கும் பணிகளை ஈரான் தொடங்கியுள்ளதாக ஐ.நா. கண்காணிப்பாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.