மாலைத்தீவில் அமெரிக்க தூதரகத்தை அமைக்க அமெரிக்கா தீர்மானம்!
30 Oct,2020
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ளும் விதமாக மாலைத்தீவில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பொம்பியோ இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையிலான சுற்றுப்பயணங்களை தொடர்ந்து மாலைத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா ஷகீத்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்துல்லா, இந்த அறிவிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே புதிய பாலத்தை இது உருவாக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மாலைத்தீவில் கார்பன் வெளியேற்றத்தை மேலும் குறைக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.