கொரோனா அச்சம்: நான்காவது முறையாக 'ஏர் இந்தியா' விமானத்துக்கு ஹாங்காங் தடை!
29 Oct,2020
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து சீனாவின் நிர்வாக கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்குக்கு இயக்கப்பட்ட 'ஏர் இந்தியா' விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு 'கொரோனா' வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து இந்த விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து மார்ச் மாதத்தில் இருந்து சர்வதேச விமான சேவை நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் தவித்த இந்தியர்களை அழைத்து வருவதற்காக 'வந்தே பாரத்' என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து விமான சேவையை தொடர்வதற்காக குறிப்பிட்ட 18 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி ஹாங்காங்குக்கு ஏர் இந்தியா நிறுவனம் விமானங்களை இயக்கியது.பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்துக்குள் வைரஸ் பாதிப்பு இல்லை என்பதற்கான சான்றிதழ் பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். மேலும் ஹாங்காங் விமான நிலையத்திலும் பரிசோதனை செய்யப்படும்.
டில்லியில் இருந்து ஹாங்காங்குக்கு இயக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து மூன்று முறை இந்த சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் மும்பையில் இருந்து சமீபத்தில் இயக்கப்பட்ட விமானத்தில் பயணம் செய்த சிலருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. அதையடுத்து நவ. 10ம் தேதி வரை இந்த மார்க்கத்தில் விமான சேவைக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.