இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அமெரிக்காவை தலையிட வேண்டாம் என்கிறது சீனா!
28 Oct,2020
இந்தியாவுக்கும் தங்களுக்கும் இடையேயான எல்லைப் பிரச்சினையில் மூன்றாவதாக ஒரு நாடு தலையிட முடியாது என சீனா தெரிவித்துள்ளது.
இந்தியாவிற்கு விஜயம் செய்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மைக் பொம்பியோ, லடாக் பிரச்சினையை பற்றி குறிப்பிடும் போது, இந்தியா தனது இறையாண்மையையும் சுதந்திரத்தையும் காக்க எடுக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா உறுதியான ஆதரவை அளிக்கும் என தெரிவித்தார்.
இது குறித்து சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவும் சீனாவும் எல்லைப் பிரச்சினையை ராஜ்ய, இராணுவ பேச்சுவார்த்தைகள் வாயிலாக தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
கருத்து வேற்றுமைகளை சரிசெய்யும் திறனும் அறிவும் இரண்டு நாடுகளுக்கும் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.