ஜேர்மனியில் கொவிட்-19 தொற்றினால் நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
27 Oct,2020
ஜேர்மனியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, ஜேர்மனியில் மொத்தமாக நான்கு இலட்சத்து 50ஆயிரத்து 258பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிகபாதிப்பை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் ஜேர்மனியில் இதுவரை 10ஆயிரத்து 182பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 12ஆயிரத்து 621பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 44பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை ஒரு இலட்சத்து 18ஆயிரத்து 476பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரத்து 362பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
அத்துடன் இதுவரை மூன்று இலட்சத்து 21ஆயிரத்து 600பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.