அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் தாய்வானுக்கு சீனா புதுவித நெருக்கடி
27 Oct,2020
!
அமெரிக்காவிடம் இருந்து 1.8 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஆயுதங்களை வாங்கும் தாய்வானுக்கு சீனா புதுவித நெருக்கடியை கொடுத்துள்ளது.
அமெரிக்க இராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களான போயிங் கோ, லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன், ரேதியான் டெக்னாலஜிஸ் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுடன் தாய்வான் தொழில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இந்தநிலையில், இந்த மூன்று ஆயுத தயாரிப்பு நிறுவனங்களுக்கும் சீன அரசாங்கம் பல தொழில் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
முன்னதாக போர்ட் நிறுவனத்துக்கு சீன நிறுவனத்துடன் தொழில் ஒப்பந்தம் இட்டதால் அபராதம் விதித்தது.
சீனாவின் இந்த நெருக்கடிகளை மீறி தங்கள் ஆயுத பலத்தை அதிகரித்துக் கொள்ள தாய்வான் தலைசிறந்த ஆயுதங்களை அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து வாங்குகிறது. எதிர்காலத்தில் சீனாவுக்கும் தாய்வானுக்கும் போர் மூண்டால் தங்களைத் தற்காத்துக்கொள்ள இந்த ஆயுதங்களை தாய்வான் பயன்படுத்த உள்ளது.