ஸ்பெயினில் தேசிய அவசரகால நிலை அறிவிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்!
26 Oct,2020
புதிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஸ்பெயின் ஒரு தேசிய அவசரகால நிலையை அறிவித்து இரவு நேர ஊரடங்கு உத்தரவை விதித்துள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு நடைமுறைக்கு வந்த ஊரடங்கு உத்தரவு 23:00 மணி முதல் 06:00 மணி வரை அமுலில் இருக்கும் என்று பிரதமர் பெட்ரோ சான்சஸ் கூறினார்
நடவடிக்கைகளின் கீழ், உள்ளூர் அதிகாரிகள் பிராந்தியங்களுக்கு இடையிலான பயணத்தையும் தடை செய்யலாம்.
சுகாதார பரிவினர் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கென மாநிலங்களுக்கு இடையில் போக்குவரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களை 15 நாட்கள் முதல் 6 மாதம் வரை நீடிப்பதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை வழங்கு வதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் தொற்றுநோயின் முதல் அலைகளின் போது ஸ்பெயின் உலகின் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தது.
இருப்பினும், பல ஐரோப்பிய பிராந்தியங்களைப் போலவே, இது இரண்டாவது அலை நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.