சீனாவிற்கு லட்சக்கணக்கில் வரி கட்டிய டிரம்ப்: வெளியான பரபரப்பு தகவல்!
21 Oct,2020
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவிற்கு 2,00,000 டொலர்களை வரியாக வழங்கியுள்ளதாக தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் அந்நாட்டு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நவம்பர் 3-ம் திகதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கின்ற நிலையில் இந்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளன. நியூ யார்க் டைம்ஸின் மதிப்பீட்டின்படி சீனாவில் உள்ள ஒரு வங்கிக் கணக்கினை டிரம்ப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் தற்போது கையாண்டு வருகின்றது.

இந்நிலையில் இந்த வங்கிக் கணக்கிலிருந்து 2015-15 காலகட்டங்களில் மட்டும் 1,88,561 டொலர்கள் வரியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால், டிரம்ப் 2016-17 காலகட்டங்களில் அமெரிக்காவில் 750 டொலர்கள் மட்டுமே வரியாக கட்டியுள்ளார். சீனாவில் வணிக ஒப்பந்தங்களைத் தொடர்ந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐந்து நிறுவனங்களில் டிரம்ப் 1,92,000 டொலர்களை முதலீடு செய்துள்ளதாக சமீபத்திய வரி பதிவுகள் காட்டுகின்றன.
எதிர்வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், கொரோனா தொற்று பரவல், ஹாங்காங் போராட்டம், மனித உரிமை மீறல் போன்ற பல விடயங்களில் சீனாவையும் அதன் அதிபரையும் கடுமையாக விமர்சித்து பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.