பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளில் பங்கேற்கும் அவுஸ்ரேலியா: சீனாவுக்கு அச்சுறுத்தலா?
20 Oct,2020
இந்தியாவின் கடற்கரையில் அடுத்த மாதம் பெரிய அளவிலான இராணுவப் பயிற்சிகளில் அவுஸ்ரேலியா பங்கேற்கவுள்ளது.
இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் – 2007ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக எதிர்வரும் நவம்பர் மாதம் மலபார் கடற்படைப் பயிற்சியில் அவுஸ்ரேலியா பங்கேற்கின்றது.
இந்திய- சீன மூலோபாய போட்டியின் முக்கிய இடமாக விளங்கும் அரேபிய கடல் மற்றும் வங்காள விரிகுடாவில் கடற்படை பயிற்சி நடைபெறும் என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவுக்கும் அவுஸ்ரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர பதற்றங்கள், சீனாவுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பொருளாதார பதற்றங்கள், மற்றும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இராணுவ பதற்றங்கள், ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த பயிற்சி நடைபெறுகின்றது.
அத்துடன், கடந்த சில தசாப்தங்களாக, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் சீனா கணிசமாக செல்வாக்கை அதிகரிக்க முயன்று வருகின்ற நிலையில், இந்த இராணுவப் பயிற்சி சீனாவிற்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படுகின்றது.