அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது: ஈரான்!
09 Oct,2020
அர்மீனியா- அசர்பைஜான் நாடுகளுக்கிடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக துருக்கி செயற்படுகின்றமை கண்டிக்கத்தக்கது என ஈரான் கூறியுள்ளது.
இதுகுறித்து நேற்று (புதன்கிழமை) ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரௌஹானி கூறுகையில், ‘நகோர்னோ-கராபக் பகுதியில் அசபைஜானுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் படையினர் அனுப்பப்படுவதை ஈரான் ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. அந்த பயங்கரவாதிகளுடன் ஈரான் பல ஆண்டுகளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது’ என கூறினார்.
நகோர்னோ-கராபத் என்ற மாகாணத்துக்கு உரிமைக் கொண்டாடும் விவகாரத்தில் அர்மீனிய- அசர்பைஜான் நாடுகளுக்கிடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், அசர்பைஜானுக்கு ஆதரவாக சிரியா மற்றும் லிபியாவில் உள்ள தனது ஆதரவு கிளர்ச்சியாளர்களை துருக்கி களமிறக்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
நூற்றுக்கணக்கான சிரியா மற்றும் லிபிய கிளர்ச்சியாளர்களை துருக்கி, விமானம் மூலம் அசர்பைஜானுக்கு அனுப்பிவைத்துள்ளது. இந்த கிளர்ச்சியாளர்கள் அசர்பைஜானுக்கு ஆதரவாகவும், அர்மீனியாவுக்கு எதிராகவும் சண்டையிட்டு வருகின்றனர்.
இதனிடையே அர்மீனிய- அசர்பைஜான் போரில் வேறுநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களை களமிறக்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என துருக்கிக்கு ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மறைமுக எச்சரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில் இப்பட்டியலில் ஈரானும் இணைந்துள்ளது