தெற்கு பிரான்ஸ் மற்றும் வடமேற்கு இத்தாலியில் சக்திவாய்ந்த புயல் தாக்கம்
04 Oct,2020
தெற்கு பிரான்ஸ் மற்றும் வடமேற்கு இத்தாலியில் சக்திவாய்ந்த புயல் தாக்கத்தினால் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேரைக் காணவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அலெக்ஸ் என்று பெயரிடப்பட்ட இது கடுமையான புயல் மற்றும் அடைமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ளன.
தெற்கு நகரமான நைஸைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் பலத்த சேதமடைந்தன என்றும் குறித்த பகுதியின் முதல்வர் இது தன் வாழ்க்கையில் கண்ட மிக மோசமான வெள்ளம் என்று விவரித்தார்.
வடக்கு இத்தாலியில், வீதிகள் மற்றும் பாலங்கள் வெள்ள நீரால் அடித்துச் செல்லப்பட்டன, அதே நேரத்தில் பல ஆறுகள் அவற்றின் கரைகளில் நிரம்பி வழிந்தமை காணொளிகளில் காணக்கூடியதாக இருந்தது.
நாட்டின் வடமேற்கில் ஒரே இரவில் பெய்த பலத்த மழையால் மேலும் 17 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது, அவர்களில் நான்கு பேர் ஜேர்மன் மலையேற்ற வீரர்கள் குழுவைச் சேர்ந்தவர்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.