அர்மீனியா உடன் போர் - 7 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக அஸர்பைஜான் அறிவிப்பு
04 Oct,2020
அர்மீனியா - அஸர்பைஜான் நாடுகளுக்கிடையே 8-வது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், அஸர்பைஜான் தரப்பு 7 கிராமங்களை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் கூறியுள்ளார். சர்ச்சைக்குரிய நாகோர்னா - கராபாக் பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கிய மோதல் முழுமையான போராக உருவெடுத்துள்ளது.
8 வது நாளாக நீடித்து வரும் இந்த போரில் நேற்றைய நிலவரப்படி நாகோர்னா - கராபாக் பகுதியில் 7 கிராமங்களை கைப்பற்றிய அஸர்பைஜான் ராணுவம் மடகிஸ் (Madagiz) நகரில் தங்களது கொடியை ஏற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அதேநேரம், அஸர்பைஜான் படைக்கு பெரும் இழப்புகளை தாங்கள் ஏற்படுத்தியுள்ளதாக அர்மீனிய தரப்பு கூறியுள்ளது.