இஸ்ரேலுடன் சவுதி அரேபியாவும் அமைதி உடன்படிக்கை செய்துக்கொள்ளும்: ட்ரம்ப் நம்பிக்கை!
18 Sep,2020
இஸ்ரேலுடன் சவுதி அரேபியாவும் விரைவில் அமைதி உடன்படிக்கை செய்துக்கொள்ளும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மேற்கு ஆசியாவில் அமைதியைக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு அங்கமாக இது அமையவுள்ளது.
பஹ்ரைன்- ஐக்கிய அரபு அமீரக நாடுகள், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதையடுத்து ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது, ‘ஏழாவது நாடாக உரிய நேரத்தில் சவுதி அரேபியாவும் இஸ்ரேல் சமாதான உடன்படிக்கையில் இணையும்’ என்று தெரிவித்தார்.
இஸ்ரேலுடன் சமாதானம் செய்த அரபு நாடுகளின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
1984ஆம் ஆண்டு இஸ்ரேல் நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதன் பின்னர், அதனை ஏற்றுக்கொள்ள மத்திய கிழக்கு நாடுகள் மறுத்தன.
முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்துடன் இஸ்ரேல் அமைதி ஒப்பந்ததை ஏற்படுத்தியதையடுத்து தொடங்கப்பட்ட விமான போக்குவரத்து சேவைக்கு, மறைமுகமாக சவுதி அரேபியா தனது ஆதரவை தெரிவித்தது.
சவுதி அரேபியா, இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்றாலும், வளைகுடாவுக்கு செல்லும் வழியில் இஸ்ரேலிய விமானங்களை தனது நிலப்பரப்பை மீற அனுமதிக்கும் என்று கூறியது.