கொரோனா தானாக வந்தது அல்ல, சீனா உருவாகியது: பெண் விஞ்ஞானி பகீர்!!
14 Sep,2020
கொரோனா வைரஸ் தானாக வந்தது அல்ல, சீன ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என சீன பெண் விஞ்ஞானி பகீர் கிளப்பியுள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இதன் பின்னர் இது உலகம் முழுவதும் பரவத்துவங்கியது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,181,934 ஆக இருந்தாலும், கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 21,026,802. பேர் உள்ளதால் தற்போது உலகம் முழுவதும் சுமார் 80 லட்சம் பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் லி மெங் யான் என்பவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில் வூகானில் உள்ள அரசு ஆய்வகத்தில் கொரோனா தொற்று கிருமி தயாரிக்கப்பட்டதாகவும், இதற்கான ஆதாரன் தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், சீன அதிகாரிகளின் மிரட்டலுக்கு அஞ்சி தற்போது அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா அதிகம் பரவத்துவங்கிய போது உலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா கொரோனா வைரஸ் சீனா உருவாக்கியது என குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.