ஒப்பந்தத்திற்குப் பின்னர் நேரடி இஸ்ரேல்-பஹ்ரைன் விமான சேவை – நெதன்யாகு
13 Sep,2020
இஸ்ரேல் – பஹ்ரைனுக்கு இடையிலான ஒப்பந்தம் நாடுகளுக்கு இடையே விமான சேவைக்கு வழிவகுக்கும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இவற்றில் இரு நாடுகளுக்கும் இடையேயான நேரடி விமான சேவை போக்குவரத்தும் அடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட பஹ்ரைன் ஒப்பந்தம், மற்றொரு வளைகுடா சக்தியான ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இதேபோன்ற ஒப்பந்தத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக நேரடி விமான இணைப்புகள் உறுதிமொழி அளிக்கப்பட்டன.
சவுதி அரேபியா, இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை என்றாலும், வளைகுடாவுக்கு செல்லும் வழியில் இஸ்ரேலிய விமானங்களை தனது நிலப்பரப்பை மீற அனுமதிக்கும் என்று கூறியுள்ளது.