ஸ்பெயினில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!
10 Sep,2020
ஸ்பெயினில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், தொடர்ச்சியாக இரண்டாவது நாளாகவும் எட்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் ஸ்பெயினில் எட்டாயிரத்து 866பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 34பேர் உயிரிழந்துள்ளனர்.
கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட ஒன்பதாவது நாடாக விளங்கும் ஸ்பெயினில், இதுவரை ஐந்து இலட்சத்து 43ஆயிரத்து 379பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 29ஆயிரத்து 628பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 15பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்