கொரோனா பாசிட்டிவ்: தனிமைப்படுத்தும் நபர்களுக்கு ரூ. 18 ஆயிரம் வழங்கும் இங்கிலாந்து
27 Aug,2020
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. ஆனால் துரிதமாக செயல்பட்டு அதில் இருந்து மீண்டு வந்துள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் 2-ம் கட்டமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதை தடுக்க அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும்போது பாசிட்டிவ் ரிசல்ட் வந்த நபர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அப்படி தனிமைப்படுத்திக் கொள்ளும்போது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஏற்கனவே பொதுமுடக்கத்தில் சிக்கி தவித்த நிலையில் தற்போது மீண்டும் அது சூழ்நிலை ஏற்பட்டால் வேலைக்கு செல்லும் நபர்கள் அதிகமாக பாதிக்கப்படுவார்கள்.
இதனால் தனிமைப்படுத்தும் 14 நாட்கள் வேலை இழக்கும் நபர்களுக்கு 182 பவுண்டு (ரூ. 17759.60 இந்திய பண மதிப்பில்) வழங்கப்படும் என இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
அதுவும் மிகவும் அதிகமான தொற்று உள்ள இடங்களில் மட்டுமே இந்த சலுகை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேட்டர் மான்செஸ்டர் மேயர் ஆண்டி பேர்ன்ஹாம் ‘‘மக்களுக்கு முழுத்தொகை கிடைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதனால் இந்த பணம் போதுமானதாக இருக்காது’’ என்றார்.
பென்டில் கவுன்சில் தொழிலாளர் தலைவர் முகமது இக்பால் கூறுகையில் ‘‘பாதிக்கப்பட்ட இடத்தில் அரசு வழங்கும் இந்த நிதி திட்டத்தை வரவேற்கிறேன். ஆனால், அரசாங்கம் அறிமுகப்படுத்தியிருப்பது உண்மையிலேயே நெகட்டிவ் ரிசல்ட் வரும் மக்களின் முகத்தில் அறைவது போன்று உள்ளது.
சிலர் அலுவலகம் சென்று முழு நேர வேலையில் ஈடுபடுவார்கள். அவர்களால் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதி இருக்காது. அப்படி இருக்கும்போது ஒரு மணி நேரத்திற்கு 4.55 பவுண்டு வழங்கிறோம் என்று அரசு சொல்கிறது’’ என்றார்.
மற்றொரு தலைவர் குறைந்த பட்ச நிதியாவது அரசு வழங்க முன்வந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.