அலிபாபா நிறுவனத்துக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலனை - டிரம்ப்
17 Aug,2020
*சோமாலியா நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள கெடோ பிராந்தியத்தில் ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய 4 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
* நேபாளத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள சிந்துபால்சோக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. காணாமல் போன 21 பேரை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
* அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிக் கூடங்களை மீண்டும் திறப்பதற்கு ஜனாதிபதி டிரம்ப் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
* இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் உள்ள கோரண்டலோ மாகாணத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.1 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை.
* சீனாவைச் சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான அலிபாபா நிறுவனத்துக்கு தடை விதிப்பது குறித்து தனது நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.