ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் வந்து பணியாற்றலாம்: அமெரிக்கா
13 Aug,2020
ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம்
அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு எச்-1 பி விசா வழங்கப்படுகிறது. இந்த எச்-1 பி விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.
அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கு என்று முழங்கி வரும் அதிபர் டிரம்ப், எச் 1 பி விசாவில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். இதனால், எச் 1 பி விசாதாரர்கள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உள்ளது.
இந்த நிலையில், எச் 1 பி விசா கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை டிரம்ப் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, ஏற்கெனவே வேலை பார்த்தவர்கள் எச் 1 பி விசா மூலம் மீண்டும் அமெரிக்கா திரும்பி பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எச் 1 பி விசா ஊழியர்கள் தங்களது மனைவி, பிள்ளைகளையும் அழைத்து வரலாம் என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.