இலங்கைப் பயணத்தை மறுபரிசீலனை செய்ய கோருகிறது அமெரிக்கா!
08 Aug,2020
இலங்கைக்கான பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அமெரிக்கா, தமது நாட்டு பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான பயண அறிவுறுத்தலில் அமெரிக்க தொற்று நோய் தடுப்புப்பிரிவு இந்த ஆலோசனையை விடுத்துள்ளது.

கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்க தொற்றுநோய் பிரிவு 4 கட்டங்களை தரமிட்டுள்ளது. அதில் இலங்கை 3ஆம் தரத்தில் பதிவாகியுள்ளது. சில நாடுகளில் கொரோனா ரைவஸ் மற்றும் பாதுகாப்பு நிலைமைகள் மேம்படுவதுடன் ஏனையவற்றில் மோசமடையக்கூடும். இதன் அடிப்படையில் அமெரிக்க தொற்றுநோய் தடுப்பு பிரிவு பயண ஆலோசனைகளை மாற்றியமைத்து வருகிறது.
இதேவேளை இலங்கையில் வீடுகளில் முடக்கநிலை நீக்கப்பட்டுள்ளதாகவும் சில போக்குவரத்து மற்றும் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாகவும் அமெரிக்க ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.