ஏவுகணையுடன் சிறிய வடிவிலான அணுஆயுத கருவியை தயாரிக்கும் வடகொரியா: ஐ.நா.
05 Aug,2020
வடகொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்தும் வகையில் சிறிய கருவிகளை (devices) தயாரித்து வைத்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஏவுகணையுடன் சிறிய வடிவிலான அணுஆயுத கருவியை தயாரிக்கும் வடகொரியா: ஐ.நா.
வடகொரியாவின் அணுஆயுதஏவுகணை சோதனை (கோப்புப்படம்)
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமீபத்தில் இனி எந்த நாட்டுடனும் போர் கிடையாது என்று அறிவித்தார். வடகொரியாவின் பாதுகாப்பை அணு ஆயுதங்கள் உறுதி செய்வதால் இனி போருக்கான தேவை இருக்காது என்று அவர் கூறியிருந்த நிலையில், வட கொரியா அதன் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்து வருவதாக ஐநா நிறுவனத்தின் ரகசிய அறிக்கை தெரிவித்துள்ளது.
ஐநா நிறுவனம் வடகொரியா மீது விதித்துள்ள தடைகளை கணகாணிக்கும் நிபுணர் குழு அந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில் வடகொரியா தனது ஏவுகணைகளில் அணு ஆயுதத்தைப் பொருத்த திட்டமிடுகிறது. அதற்கான சிறிய வடிவிலான சாதனங்களை தயாரித்து வைத்துள்ளன எனத் தெரிவித்துள்ளது.