தென்சீனக் கடல் பகுதியில் அதிநவீன ஆயுதங்களுடன் சீனா போர் பயிற்சி!
28 Jul,2020
தென்சீனக் கடல் பகுதியை சட்டவிரோதமாக தொடர்ந்து உரிமை கொண்டாடி வரும் சீனா, அப்பகுதியில் போர் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளது.
இந்த போர் பயிற்சியில், சக்தி வாய்ந்த ஏவுகணைகள், ரொக்கெட்டுகள் சோதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தென் சீன கடல் பகுதியின் நுழைவாயிலாக கருதப்படும், குவாங்டாங் மாகாணத்தின், லெய்சோவ் பகுதியில், இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
இதில், சீன கடற்படையினரும் இணைந்து, பயிற்சிகளில் ஈடுபடவுள்ளனர். ஒரு வாரம் நடத்த திட்டமிட்டுள்ள இந்த பயிற்சிகளில், எதிரி நாட்டு கப்பல்கள் மற்றும் விமானங்களை குறிவைத்து தகர்க்கும் பயிற்சிகளும் மேற்கொள்ள இருப்பதாக தெரிய வந்துள்ளது.
சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் மற்றும் ரொக்கெட்டுகள் பரிசோதிக்கப்படவுள்ளதால், அந்த பகுதிக்குள் யாரும் வரவேண்டாம் என, சீன இராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.