அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை மறைத்த சீன அதிகாரிகள்
28 Jul,2020
சீனாவின் செங்டூ நகரில் செயற்பட்டு வந்த அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டதை தொடர்ந்து, தூதரக வளாகத்தை கையகப்படுத்திய சீன அதிகாரிகள், அங்கு பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு சொந்தமான அறிவுச் சொத்துகளை சீனா திருடுவதாக குற்றஞ்சாட்டிய அமெரிக்கா, ஹூஸ்டனில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை மூட உத்தரவிட்டது.
இதற்கு பதிலடியாக தென்மேற்கு நகரமான செங்டூவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தை மூட சீனா உத்தரவிட்டது.
மேலும் இதன்போது 72 மணிநேர காலக்கெடு வழங்குவதாகவும் அதற்குள் தீர்மானத்தை மறு ஆய்வு செய்யுமாறும் சீனா தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று குறித்த காலக்கெடுவுக்கு முன்னர், அங்கு பணியாற்றிய அமெரிக்கர்கள் வெளியேறிய பின்னர், முழு கவச உடையில் களமிறங்கிய சுகாதாரத்துறை பணியாளர்கள், கிருமி நாசினியால் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, தூதரகத்துக்கு வெளியே போக்குவரத்தை தடை செய்த காவலர்கள், சீன கொடி ஏந்தி முழக்கங்கள் எழுப்பிய நபரை அங்கிருந்து வெளியேற்றினர்.
அத்தோடு, அமெரிக்கத் தூதரகத்தில் பொறிக்கப்பட்டிருந்த ஆங்கில வாசகங்களை சுவரொட்டிகளால் மறைத்துள்ளனர்.