கறுப்பின பொலிசார் ஒரு பக்கம்- அமெரிக்கா இரண்டாக உடையும் பெரும் அபாயம் ?
27 Jul,2020
அமெரிக்காவில் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு, இன வேற்றுமை அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் லூஸ்வில்லா மாகாணத்தில் மீண்டும் கறுப்பின பொலிசார் தமக்கு தாமே குழுக்களை அமைத்து வருகிறார்கள். அவர்கள் வெள்ளை இன பொலிசாருடன் கூட்டுச் சேருவது இல்லை. இதனால் அவர்கள் பிரிந்து செயல்பட்டு வருகிறார்கள். கறுப்பின மக்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது தொடக்கம் பல பணிகளை அவர்கள், தலைமையக அறிவுறுத்தல் இன்றி செய்து வருவது ஒருபுறம் இருக்க.
ஏனைய மாநிலங்களில் இனவெறி தலை தூக்கி ஆடுகிறது. இதனால் அமெரிக்கா இரண்டாக உடையும் அபாய நிலையில் உள்ளதாக அவதானிகள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கு முழு காரணமாக அமைந்திருப்பது அதிபர் ரம்பின் நிர்வாகமே. சில சின்ன விடையங்களை கூட, தீர்த்து வைக்க முடியாமல் அதனை ஊதி பெரிசாக்கி விட்டிருக்கிறது ரம் நிர்வாகம். அமெரிக்காவில் கறுப்பர்கள் எண்ணிக்கை வெள்ளையர்களோடு ஒப்பிடும்போது மிகச் சொற்பமே.
இருப்பினும் அவர்கள் இருப்பு குறித்த பிரச்சனை தற்போது பெரும் விடையமாக தலைதூக்கியுள்ளது. கறுப்பர்கள் வாழும் மாநிலங்கள், ஒரு வித்தியாசமான முறையிலும். வெள்ளை இனத்தவர்கள் வாழும் மாநிலங்கள் வேறு ஒரு வடிவிலும் தற்போது உள்ளது. இதனை சரி செய்யவில்லை என்றால். விரைவில் இது பூதாகரமாக மாற வாய்ப்புகள் உள்ளது. பெரும்பாலும் இது ஒரு உள்நாட்டு யுத்தமாக வெடிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது.