கொரோனா வைரஸ் – ரஷ்யாவில் இரண்டாம் கட்ட தடுப்பூசி பரிசோதனை ஆரம்பம்!
27 Jul,2020
ரஷ்யாவில் மனிதர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி பரிசோதனை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்படுகிறது.
ஏற்கனவே ரஷ்யாவில் முதற்கட்ட பரிசோதனை மனிதர்களுக்கிடையே நடத்தப்பட்டது. இதில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து ஆர்வலர்களுக்கும் கொரோனா எதிர்ப்பு சக்தி உண்டானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து, அந்நாட்டின் வைராலஜி தேசிய ஆராய்ச்சி மையம் இரண்டாம் கட்ட மனிதர்களுக்கிடையேயான சோதனை ஜூலை 27 ம் திகதி நடத்தப்படும் என அறிவித்தது.
இதற்கான அனுமதி ஜூலை 24ஆம் திகதி பெறப்பட்டுள்ளதாகவும் ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய இன்று முதல் 2ஆம் கட்ட பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன.
இதேநேரம் முதற்கட்டமாக ரஷ்யாவில் 3 கோடி கொரோனா தடுப்பூசி மருந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 17 கோடி தடுப்பூசி மருந்துகள் 5 வெளிநாடுகளுக்கு தயாரித்து வழங்க தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.