கொரோனா காலத்திலும் ஒரே நாளில் ரூ. 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்த அமேசான்
22 Jul,2020
கொரோனா காலத்திலும் தனது ஆன்லைன் விற்பனை மூலம் ஒரே நாளில் 9 ஆயிரம் கோடி சொத்து சேர்த்து சாதனை படைத்துள்ளார் அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெப் பெசோஸ்
கொரோனா வைரசால் உலக நாடுகளில் கடும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஊரடங்கால் மக்கள் வெளியே வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், அத்தியாவசிய தேவைக்காக ஆன்லைன் ஷாப்பிங்கை அமெரிக்கர்கள் அதிகம் பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருவதையடுத்து ஆன்லைன் விற்பனையில் முன்னணி வகித்து வரும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் சொத்து ஒரே நாளில் 13 பில்லியன் டாலர் (ரூ.9,703 கோடி) உயர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டின் துவக்கத்தில் 74 பில்லியன் டாலராக இருந்த பெசோசின் சொத்து மதிப்பு தற்போது 189 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இது 73 சதவீதம் எனவும், கடந்த 2012-ம் ஆண்டிற்கு பின்னர் தனிநபர் ஒருவர் அதிகபட்சமாக சொத்து சேர்த்துள்ளது இது தான் எனவும் புளும்பெர்க் இதழ் தனது டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது