இனி இவர்கள் அமெரிக்காவிற்குள் வரக்கூடாது – ட்ரம்ப் அரசு !
18 Jul,2020
அமெரிக்காவில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நுழைவதற்கான தடையை அமுல்படுத்த டிரம்ப் அதிரடி மசோதா ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த சில மாதங்களாக அமெரிக்காவும் சீனாவும் பல்வேறு பிரச்சினைகளில் மோதி வருகின்றது. சமீபத்தில் கொரோனா தொற்று, ஹாங்காங் மீதான நெருக்கடி போன்ற நடவடிக்கைகளால் சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் உள்ளது. எனவே இரு நாடுகளும் மாறிமாறி பல்வேறு பதிலடி கொடுத்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக சீனாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும் அவர்களது குடும்பத்தினரும் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக வரைவு மசோதா ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி சீனா கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் புதிதாக நுழைய தடை விதித்ததுடன் ஏற்கனவே அமெரிக்காவில் இருக்கும் உறுப்பினர்களுக்கும் வெளியேற வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா அமலுக்கு வந்தால் அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் என நியூயார்க்கின் டைம்ஸ் பத்திரிக்கை செய்தியை வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடர்பாக அரசுத் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளது.