சீன விமான நிறுவனங்களின் விமானங்களை வாரத்திற்கு ஒரு பயணிகள் விமானம் என கட்டுப்படுத்தியது பிரான்ஸ்
15 Jul,2020
சீன விமான நிறுவனங்களின் விமானங்களை வாரத்திற்கு ஒரு பயணிகள் விமானம் என பிரான்ஸ் கட்டுப்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் விமானங்களுக்கு, பெய்ஜிங் விதித்த தடைகளுக்கு பதிலளிக்கும் வகையில் இது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
‘ஜூலை 13ஆம் திகதி முதல் சீன நிறுவனங்களுக்கு ஒரு வார பயணம் மட்டுமே செய்ய அதிகாரம் வழங்கப்படும்’ என்று பெய்ஜிங்கில் உள்ள பிரான்ஸ் தூதரகம் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
சீனாவின் மாநில விமான ஒழுங்குமுறை (ஊயுயுஊ), இதுதொடர்பாக உடனடியாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை.
சீன விமான நிறுவனங்களான எயார் சீனா, சீனா ஈஸ்டர்ன் எயார்லைன்ஸ் கார்ப் மற்றும் சீனா சதர்ன் எயார்லைன்ஸ் கோ ஆகியவை ஒவ்வொன்றும் சீன நகரங்களிலிருந்து பரிஸுக்கு வாராந்திர விமானங்களை இயக்க அங்கீகாரம் பெற்றுள்ளதாக பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 12ஆம் திகதி பரஸ்பர ஏற்பாட்டின் கீழ், சீனாவுக்கு வாரத்திற்கு மூன்று விமான பயணங்களை மேற்கொள்ள எயார் பிரான்ஸ், பெய்ஜிங்கால் அங்கீகாரம் பெற்றது. ஆனால் சீன அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு எயார் பிரான்ஸ் விமானத்தை மட்டுமே அனுமதித்தனர்