மீண்டும் கொவிட்-19 தொற்று அச்சுறுத்தல்: புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் ஹொங்கொங்!
14 Jul,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் தலைதூக்கியுள்ளதால், புதிய சமூக தூர நடவடிக்கைகளை ஹொங்கொங் விதிக்கவுள்ளது.
இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, பொதுப் போக்குவரத்தில் இருப்பவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும். இதை பின்பற்றாதவர்களுக்கு 5,000 ஹொங்கொங் டொலர் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், 18:00மணி முதல் 05:00 மணிவரை மட்டுமே உணவகங்கள் இனி உட்புற சேவையில் ஈடுபடும். 18:00க்குப் பிறகு உணவுகளை எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்.
இந்த ஆண்டு முந்தைய தொற்று பரவலின் போது விதிக்கப்பட்டிருந்த தடைகளில், தற்போதைய விதிகள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை.
இந்த புதிய நடவடிக்கைகள் சில கடந்த காலங்களை விட மிகவும் கடுமையானவை என்றும், ஆனால் அவை வைரஸின் சமீபத்திய பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கியமானவை என்றும் ஹொங்கொங் தலைவர் கேரி லாம் கூறினார்.
ஹொங்கொங்கில் இதுவரை 1,522பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 8பேர் உயிரிழந்துள்ளனர்.