மீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகும் கிரேக்கம்!
09 Jul,2020
அடுத்த வாரம் மீண்டும் பொது மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராக இருப்பதாக, கிரேக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
கொரோனா வைரஸிற்கான பாதுகாப்பு வழிகாட்டுதல் அடிக்கடி புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.
அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஸ்டெலியோஸ் பெட்சாஸ் இதுகுறித்து கூறுகையில், ‘அற்பமான சிலரிடமிருந்து பெரும்பான்மையைப் பாதுகாக்க அதிகாரிகள் உறுதியாக உள்ளனர். திங்களன்று தேவைப்பட்டால் அரசாங்கம் புதிய கட்டுப்பாடுகளை அறிவிக்கக்கூடும்’ என கூறினார்.
கடுமையான முடக்கநிலை கட்டுப்பாடுகளை விதித்த கிரேக்கம், தொற்று வீதங்களை குறைவாக வைத்திருக்கிறது. ஆனால் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, சமீபத்திய வாரங்களில் சர்வதேச பயணம் மீண்டும் தொடங்கப்பட்டதிலிருந்து தொற்றுகள் அதிகரித்துள்ளன.
அருகிலுள்ள, பால்கன் நாடுகளில் அதிகரித்து வரும் தொற்றுகள் மற்றும் பல்கேரியாவுடனான நிலப்பரப்பில் கிரேக்கத்திற்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள், அத்தியாவசியமற்ற பயணங்கள் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிரேக்கத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றினால், 3,622பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 193பேர் உயிரிழந்துள்ளனர்.