அவுஸ்ரேலியாவில் ஐந்து மில்லியன் மக்கள் ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை!
09 Jul,2020
கொரோனா வைரஸுக்கு (கொவிட்-19) எதிரான அவுஸ்ரேலியாவின் போராட்டத்தின் அடுத்த கட்டம், தொடங்கியுள்ளது.
ஆம்! மெல்பேர்ன், மார்னிங்டன் தீபகற்பம் மற்றும் மிட்செல் ஷைர் முழுவதும் ஐந்து மில்லியன் மக்கள் அத்தியாவசிய காரணங்களைத் தவிர்த்து, அடுத்த ஆறு வாரங்களுக்கு வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
எப்போது வேண்டுமானாலும் எங்கும் சோதனைச் சாவடிகள் அமைத்து, நகரத்தை சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்படுமென பொலிஸார் கூறுகின்றனர்.
விக்டோரியா மாநிலத்தில் 191 புதிய நோய்த்தொற்றுகள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை முடக்கநிலை அறிவிக்கப்பட்டது. இது தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து அதன் மிக உயர்ந்த தினசரி எண்ணிக்கை இதுவாகும்.
முந்தைய நாட்களில் பல்பொருள் அங்காடிகளில் கொவிட்-19 தொற்று பரவல் அச்சம் இருந்ததன் காரணமாக, புதிய கட்டுப்பாடுகள் புதன்கிழமை நள்ளிரவில் அமுல்படுத்தப்பட்டன. கொள்முதல் வரம்புகள் விதிக்கப்பட்டன.
நியூசவுத் வேல்ஸில் முதல்வர் கிளாடிஸ் பெரெஜிக்லியன், எல்லைக் கடப்புகளின் விளைவாக வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க ஆல்பரிக்கு வடக்கே இரண்டாவது எல்லையை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.