அணு ஆயுத பேச்சுவார்த்தை : அமெரிக்காவுக்கு சவால் விடுத்துள்ள சீனா
08 Jul,2020
அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை சீனாவின் மட்டத்திற்குக் குறைக்கத் தயாராக இருந்தால், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடனான முத்தரப்பு ஆயுதக் கட்டுப்பாட்டு பேச்சுவார்த்தையில் சீனா மகிழ்ச்சியாக பங்கேற்கும் என்று சீன மூத்த தூதரக அதிகாரி புதன்கிழமை தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகவுள்ள அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையேயான முக்கிய அணு ஆயுத ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதற்காக முத்தரப்பு பேச்சுவார்த்தைகளில் சேர சீனாவுக்கு அமெரிக்கா பலமுறை அழைப்பு விடுத்துள்ளது.
முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சேர சீனாவிற்கு விருப்பம் இல்லை என சீன வெளியுறவு அமைச்சகத்தின் ஆயுதக் கட்டுப்பாட்டுத் துறையின் தலைவர் ஃபூ காங் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்