ருமேனியாவில் 30,000 பேருக்கு கொரோனா வைரஸ்
08 Jul,2020
ருமேனியாவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியான புதிய நோயாளிகள் 555 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 175 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 26 அன்று ருமேனியாவின் கொரோனா வைரஸ் தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 1,817 பேர் இறந்துள்ளனர்.
ஜனாதிபதி கிளாஸ் அயோஹானிஸ் மார்ச் மாதத்தில் கடுமையான முடக்கத்தை அமுல்படுத்தியதுடன் வைரஸை கட்டுப்படுத்த அவசரகால நிலையையும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் குறித்த அவசரகால பிரகடனம் எதிர்வரும் 15 ஆம் திகதியுடன் முடிவடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது