பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம்: சீனா மிரட்டல்!
02 Jul,2020
மூன்று மில்லியன் ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு சீன கொடுங்கோலாட்சியிலிருந்து தப்பிக்க வழி வகை செய்துள்ளதற்காக, பிரித்தானியாவை பழிக்குப்பழி வாங்குவோம் என சீனா இன்று மிரட்டல் விடுத்துள்ளது. சீனா புதிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் ஹொங்ஹொங்கின் சுதந்திரத்தைக் கழுத்தை நெறிப்பதாக பிரித்தானியா குற்றம் சாட்டிய சில மணி நேரத்திற்குள், லண்டனிலுள்ளசீன தூதரகம், ஹொங்ஹொங் நாட்டவர்களுக்கு பிரித்தானியா விடுத்துள்ள அழைப்பு சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என குறிப்பிட்டதோடு, இந்த நடவடிக்கையை உறுதியாக எதிர்ப்பதாகவும், தக்க பதில் நடவடிக்கை எடுப்போம் என்றும்பிரித்தானியாவை மிரட்டியுள்ளது.
இது தொடர்பாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசிய பாதுகாப்புச் சட்டத்தை தனிப்பட்ட முறையில் உணர்வு ரீதியாக பார்க்காமல் சீனாவின் நிலைப்பாட்டை மதித்து, ஹொங்ஹொங் விடயத்தில் எவ்வகையிலும் தலையிடுவதிலிருந்து விலகிச்செல்லுமாறு பிரித்தானியாவை வலியுறுத்துகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினை சீனாவுடனான பிரித்தானிய உறவில் மீண்டும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், பிரித்தானியாவைப் போலவே தனது அரசும் ஹொங்ஹொங் மக்களுக்கு குடியுரிமை வழங்குவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்காட்மோரிசனும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது