ஆண்டுக்கு சராசரியாக 4.60 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர்.
01 Jul,2020
இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் 4.58 கோடி பெண்கள் காணாமல் போனதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
ஐ.நா. மக்கள் தொகை நிதியம், சர்வதேச மக்கள் தொகை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் காணாமல் போகும் பெண்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, 1970ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டு காலத்தில் 6.10 கோடி பெண்கள் மாயமானதாகவும், 1970 - 2020ஆம் ஆண்டு வரையிலான 50 ஆண்டுகளில் மாயமான பெண்களின் எண்ணிக்கை 14.26 கோடியாக அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண் சிசு என்று அறிந்து கருக்கலைப்பு செய்வது, பிறந்து உயிரிழக்கும் பெண் குழந்தைகள் ஆகியவையும் இந்த காணாமல் போன பெண்களின் பட்டியலில் இடம்பெறும். அந்த வகையில் இந்தியாவில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளில் சுமார் 4.58 கோடி பெண்கள் காணாமல் போயிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், 2013 - 17-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 4.60 லட்சம் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் மாயமாகியுள்ளனர். உலகளவில் மாயமான 21 சதவீத பெண்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்கள் என்று அறிக்கை காட்டுகிறது, இது 2015-16 கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 26.8 சதவீதமாக இருந்தது.
மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவில், இதே 50 ஆண்டு காலத்தில் 7.23 கோடி பெண்கள் மாயமாகியுள்ளனர்.
கடந்த 50 ஆண்டுகளில் உலகளவில் காணாமல் போன பெண்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
ஐ.நா. அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் அதிக பெண் இறப்பு விகிதம் உள்ளது, 1,000 பெண் பிறப்புகளுக்கு 13.5 ஆக உள்ளது. இது 5 வயதுக்கு குறைவான பெண்களின் ஒன்பது இறப்புகளில் ஒன்று முந்தைய பாலின தேர்வுக்கு காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது.