கொரோனா வைரஸிலிருந்து தப்பித்த போஸ்னியா நாட்டின் ஜெலஸ்னிகா .லுகோமிர்.!
29 Jun,2020
கொரோனா அச்சத்தால் வல்லரசு நாடுகளே முடங்கிக் கிடக்கும் வேளையில், ஐரோப்பிய மலை கிராமம் ஒன்றில் தொற்று பயமின்றி மக்கள் அன்றாட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
போஸ்னியா நாட்டின் ஜெலஸ்னிகா மலையில் ஆயிரத்து 500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லுகோமிர் மலைக் கிராமம். அந்நாட்டின் மிக உயரமான கிராமமாக திகழும் இந்த கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு கால்நடை வளர்ப்பே பிரதானமான தொழிலாக உள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் போஸ்னியா நாட்டில் பரவத் தொடங்கிய மார்ச் மாதத்திலேயே அங்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில், லூகோமிர் மலைக் கிராமத்தில் முதியவர்கள் கூட முகக் கவசம், கையுறை அணியாமல் வழக்கமான பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
இங்கு கொரோனா கிடையாது. முகக் கவசம், கையுறை இல்லாமல் சுதந்திரமாக நடமாடுகிறோம். குளிர் காலம் இல்லாதபோதே கையுறை அணிவது ஏன் என்று நகர மக்களை பார்த்து நகைச்சுவையாக கேட்டேன். கொரோனாவில் இருந்து பாதுகாக்க இதனை அணிகிறார்கள். இதனை பாரம்பரியமாக கடைபிடித்தால் நல்லது. பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைக்க இது அவசியம். நகரமோ, கிராமமோ பாராம்பரியத்தை விட்டுக் கொடுப்பதற்கு பதில் இறந்துவிடலாம். நான் நகருக்கு சென்றால் கையுறை அணிவேன்.