கொவிட்-19 தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஆரம்பித்தது ஜேர்மனி!
19 Jun,2020
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கு எதிரான தடுப்பூசிக்கான முதல் மருத்துவ பரிசோதனையை ஜேர்மன் உயிர் மருந்து தயாரிப்பு நிறுவனமான க்யூர்வாக் (CureVac) ஆரம்பித்துள்ளது.
டூபிங்கன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்த சோதனையில், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 100 இற்க்கும் மேற்பட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.
முதல் சோதனை முடிவுகள் இரண்டு மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜேர்மன் செய்தி வலைத்தளமான ஃபோகஸ் தெரிவித்துள்ளது.
தடுப்பூசிக்கு மனித சகிப்புத்தன்மையையும், அதற்கு மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் விஞ்ஞானிகள் கண்டறிய முயற்சிக்கின்றனர் என்று சோதனைக்கு பொறுப்பான பேராசிரியர் பீட்டர் கிரெம்ஸ்னர் தெரிவித்துள்ளார்.
க்யூர்வேக்கில் 337 மில்லியன் டொலர் பங்குகளை வாங்குவதாக ஜேர்மன் அரசாங்கம் அறிவித்த மூன்று நாட்களுக்குப் பிறகு இந்த செய்தி வந்துள்ளது.