கொவிட்-19 முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த லக்சம்பேர்க் தீர்மானம்!
27 May,2020
சிறிய ஐரோப்பிய நாடான லக்சம்பேர்க், கொரோனா வைரஸ் (கொவிட்-19) முடக்கநிலை கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானித்துள்ளது.
இதன்படி, தேனீர் விடுதிகள் மற்றும் உணவகங்களை நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் திறக்க அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.
2 மீட்டர் (6.5 அடி) தூர இடைவெளி மற்றும் கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட முக்கிய கட்டுப்பாடுகளுடன் திருமணங்கள், இறுதி சடங்குகள் மற்றும் விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்வுகளும் நாளை முதல் அனுமதிக்கப்படுகின்றன.
இதுகுறித்து பிரதமர் சேவியர் பெட்டல் கூறுகையில், ‘ஸ்பாக்கள் இல்லாத அனைத்து கடைகள், சினிமாக்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் வார இறுதியில் மீண்டும் வணிகத்தை தொடங்க அனுமதிக்கப்படும்.
ஒவ்வொரு மேசையிலும் நான்கு பேருக்கு மேல் இல்லாத வரை, உணவகங்கள் வாடிக்கையாளர்களுக்கு தங்கள் மொட்டை மாடிகளில் சேவையை வழங்க முடியும்.
உட்புற உணவு வழங்கு சேவை, வெள்ளிக்கிழமை மீண்டும் தொடங்கும். இருப்பினும் வாடிக்கையாளர்கள் நுழையும் போது முகக்கவசங்களை அணிய வேண்டும். மேலும் மேசைகள் 1.5 மீட்டர் (சுமார் 5 அடி) இடைவெளியில் பிரிக்கப்பட வேண்டும்’ என கூறினார்.
பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் சூழப்பட்டுள்ள சிறிய ஐரோப்பிய நாடான லக்சம்பர்க்கில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு 3,993பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 110பேர் உயிரிழந்துள்ளனர்.