ஜூன் மாதத்தில் இருந்து அவுஸ்ரேலியாவிற்கு பாதுகாப்பான பயணம் – நியூசிலாந்து எதிர்பார்ப்பு
27 May,2020
நியூசிலாந்து மற்றும் அஸ்ரேலியாவிற்கு இடையேயான பாதுகாப்பான விமான சேவையை தொடங்குவதற்கான திட்டம் ஜூன் மாத ஆரம்பத்தில் அறிவிக்கப்படும் என பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்கம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் வேறு சில ஐரோப்பிய நாடுகளை விட மிகக் குறைந்த அளவு தாக்கமே இரு நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ளமையினால் இரு நாடுகளுக்கிடையிலான விமான சேவை குறித்து இருதரப்பும் ஆலோசித்து வருகின்றது.
இந்நிலையில் இது குறித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் பேசியதாகவும், இதன்போது போக்குவரத்து நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதற்க்கான விருப்பத்தை தெரிவித்ததாகவும் பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக, அரசாங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உட்பட இரு நாடுகளின் வல்லுநர்களும் தங்கள் எல்லைகளை மீண்டும் திறக்கும் திட்டம் தொடர்பாக செயற்பட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது