ஒரே நாளில் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா - ரஷ்யாவை பின்னுக்கு தள்ளியது பிரேசில்
23 May,2020
:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 53 லட்சத்தை நெருங்கி வருகிறது. சிகிச்சை பெறுபவர்களில் 44 ஆயிரத்து 582 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 39 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் தற்போது உலகின் 215 நாடுகளுக்கு பரவியுள்ளது. ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்த கொரோனா கடந்த சில மாதங்களாக அமெரிக்காவில் கோரத்தாண்டம் ஆடிவருகிறது.
உலகளவில் வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
ஆனால், தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது.
பிரேசில் நாட்டில் ஒரே நாளில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு 3 லட்சத்து 30 ஆயிரத்து 890 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்காவை தொடர்ந்து கொரோனாவுக்கு அடுத்த இலக்காக பிரேசில் நாடு மாறி வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் அச்சமடைந்துள்ளனர்.