பிரேசில் மீது பயணத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை
20 May,2020
பிரேசிலில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அந்நாட்டின் மீது பயணத் தடை விதிப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதல் இடத்திலும்,பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்நிலையில் பிரேசிலில் இருந்து மக்கள் அமெரிக்காவுக்கு வருவதைத் தடை செய்ய அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.
பிரேசில் மக்கள் அமெரிக்காவுக்கு வருகை தந்து அவர்களால் இங்குள்ள அமெரிக்கர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதை தான் விரும்பவில்லை என்றும் அதேபோல், எங்களால் அங்கு நோய்த்தொற்று ஏற்படவும் விரும்பவில்லை என தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப் எனவே பி பயணத் தடை குறித்துப் பரிசீலித்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டு அதேவேளை 17 ஆயிரத்து 983 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.