கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்ட ரஷ்யா பிரதமர் மீண்டும் பதவியை பொறுப்பேற்றார்!
20 May,2020
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரஷ்யா பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் தற்போது வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு, பணிக்கு திரும்பியுள்ளார்.
கடந்த மார்ச் மாத இறுதியில், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 54 வயது நிரம்பிய மிக்கைல், வைரஸ் பாதிப்பு உறுதியானதையடுத்து, தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டார்.
எனினும், முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக, அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். இவருக்கு பதிலாக தற்காலிகமாக துணைப் பிரதமராக ஆன்ட்ரி பெலுசோவ் பணியாற்றினார்.
இந்தநிலையில், தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து பூரணமாக குணமடைந்துள்ள நிலையில், பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் மீண்டும் தனது பணியினை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் நிதியமைச்சராக இருந்த மிக்கைல் மிஷூஸ்டின், கடந்த ஜனவரி 16ஆம் திகதி தான் ரஷ்யாவின் பிரதமராக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்குது