நியூயார்க்கில் ஊரடங்கு தளர்வு தள்ளிவைப்பு
20 May,2020
உலகநாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வரும் வேளையில் அமெரிக்க அதன் கோரப்பிடியில் சிக்கி உள்ளது. அங்கு இது வரை மொத்தம் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். 93 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் நியூயார்க் மாகாணத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்காவின் வெவ்வேறு மாகாணங்களில் ஊரடங்கில் தளர்வு இருந்தாலும் பாதிப்பு அதிகமாக உள்ள நியூயார்க்கில் தளர்வு தள்ளி போகிறது
நியூயார்க்கில் மட்டும் கொரோனா பலி, 15 ஆயிரத்து, 983 ஆகவும், பாதிப்பு, 1லட்சத்து, 91 ஆயிரத்து, 073 ஆகவும் அதிகரித்துள்ளது. 'நாள்தோறும், பலியும், பாதிப்பும் அதிகரிப்பதால், ஜூன்,1க்குப் பதிலாக, 15க்கு மேல் தான் ஊரடங்கை தளர்த்த முடியும். அது கூட, கொரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ள மாவட்டங்களில் மட்டுமே தளர்வு இருக்கும்' என, நியூயார்க் மேயர், பில் டி பிளாசியோ தெரிவித்துள்ளார்.